பெரிய பெரியக் கட்டிடங்கள்
இடையிடையே வெற்றிடங்கள்
உற்று உற்றுப் பார்க்கும் போது
வற்றிப் போன நீர்த்தடங்கள்.
கரடு முரடுப் பாதையோடுக்
காடு வழியேக் கடந்தது
ஓடி ஓடி உழைத்த நதி
வாடி வாடி வறன்டது.
கரை அருகேப் பணை மரங்கள்
பணையருகேச் செடிக் கொடிகள்
கொடி அருந்து பணைச் சரிந்து
நீர் உருஞ்சும் விஷ ஆலைகள்.
தேடித் தேடி நீரெடுத்து
விற்று விற்றுப் பிழைக்கிறாய்
வாரி வாரி மணலெடுத்து
நீரின் ஓட்டம் தடுகிறாய்.
இயற்கை அழித்து செயற்கை புகுத்தி
என்ன லாபம் காண்கிறாய் ? வையத்தில்
நான் வாழ நீ வாழ - நீர் வேண்டும்
நாம் வாழ!
– சுதர்சன் ஸ்ரீநிவாசன்
Good!!! Come back and start again!!
LikeLike
Nandrigal !!!
LikeLike