சிந்தனையில் பிறந்து செயலில் படர்ந்து
முகத்தில் முதிர்ந்து கண்ணீரில் இறந்து
சிறியப் பெரிய இடர்களுக்கு இடம் தந்து
விலகிச் செல்கிறது மகிழ்ச்சி எனும் விருந்து!
தலைக்கனத்திற்கும் தலைவிதிக்கும் பிறந்து
தலைவலியையும் விசனத்தையும் வேரூன்றி
மனமரதில் வலிமை மலர வழி வகுத்து
கண்ணீரில் கரைகிறது சோகம் எனும் மருந்து!
– சுதர்சன் ஸ்ரீநிவாசன்