சத்தமுடன் சத்தியம் பேசு தீயோர்பக்கம் நின்றாலும்
நித்தம் நித்தம் நிந்திப்பர் உண்மையாக இருந்துவிட்டால்
இரத்தம் கொஞ்சம் வடிந்தாலும் உண்மைக்காக தாங்கிக்கொள்
குத்தமொன்றுச் செய்தாலும் தயக்கமின்றி ஒத்துக்கொள்!
லஞ்சம் வைத்து இழுப்பார்கள் உறக்கத்திலும் மறுத்துவிடு
அஞ்சும் பத்தும் கைமாறும் பஞ்சம் போக்க என்பார்கள்
கொஞ்சமென்று பல்லிளிப்பார்கள் முடிந்தால் காரி உமிழ்ந்திடு
நெஞ்சுக்குரமாய் நேர்மையை விதைத்து எஞ்சும் வாழ்வில் நிம்மதி நாடு!
தோல்வி தோல்வி என்றாலும் தோளில் தூக்கி முன்னெடு
வேள்வித்தீயினை வளர்த்துக்கொள் வேதனைக் காலத்திலும் சுடர்தரும்
கேள்வி பல வந்தாலும் கேலி பல வந்தாலும் இலக்கு நோக்கி நகர்வதே பதிலெனக்கொள்
நல்வினை உன்னை கரைச் சேர்க்கும் உழைக்கும் வழியில் நீ நகர்ந்தால்!
வைய்யம் கூடி வாழலாம் வானுயர வாழலாம்
மய்யம் கொண்ட வறுமையை வழக்கொழித்து வாழலாம்
செய்யும் செயலில் நெறியுடனே நேர்மையாக நடந்திடுவோம்
மெய்யானறிவு நாம் காண பொய்யுடன் விரைவில் விலகிடுவோம்!
– சுதர்சன ஸ்ரீநிவாசன்
