நடமாட உடல் இல்லை
அலைப் பாய உயிரில்லை
அரவணைக்க ஆளில்லை
ஞாமகங்கள் யேதுமில்லை
ஞாலத்தைச் சுற்றி சுற்றி
சுற்றித் திரிந்தது என் ஆன்மா!
தூரத்தில் ஒரு தவத்தின் வலிமை
என் ஆன்மாவை ஈர்க்க
இரு உயிரின் மகிழ்ச்சியில் உருவானேன்
கருவானேன்!
எட்டி எட்டி உதைத்தேன் எட்டும் வரை
தட்டித் தட்டிக் கொடுத்தாயே தாயே!
என் உயிர்ப் பிழைக்க
உன் வயிறுக் கிழித்தாய்
அன்று அறுந்தது தொப்புள் கொடி
தொடர்ந்ததோ அறுக்க முடியாத பாசக் கொடி!
– சுதர்சன் ஸ்ரீநிவாசன்