ஊரடங்கும் இரவினிலே
மனமடங்க மறுக்கிறதே
மனமடங்கும் வேளையிலே
உடலடங்கி மரைகிறதே!
நிலவடங்கும் பகலினிலே
சினமடங்க மறுக்கிறதே
சினம் தணிந்து வேளையிலே
குணம் நாறி போகிறதே!
தனம் கூடி வருகையிலே
விலையேறி நிக்கிறதே
விலை வீழும் வேளையிலே
பொருள் பொருளற்று போகிறதே!
பொய்கள் கூத்தாடும் காலங்களில்
உண்மை உரக்க உறங்குகிறதே
எல்லாம் ஓய்ந்து முடிந்தபின்
நீதி வந்து சேர்கிறதே!
ஆசை அடங்கும் காலங்களில்
வயது கடந்து போகிறதே
வயது கடந்து போகும் போது
நோய்கள் வந்து சேர்கிறதே!
– சுதர்சன ஸ்ரீநிவாசன்
ஆங்கில பெயர்ப்பு/English Version:
https://viruvasan.wordpress.com/2020/05/12/practicality-of-life/
[…] https://viruvasan.wordpress.com/2020/05/03/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0… […]
LikeLike